மத்திய வட்டாரத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் தனியார் மற்றும் கூட்டுரிமை மேம்பாடுகளில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வீடுகள் தொடர்பிலான வழிகாட்டி முறைகளை நகர மறுசீரமைப்பு ஆணையம் திருத்தி உள்ளது. திருத்தப்பட்ட வழிமுறை புதிய தனியார் தரை வீட்டு மேம்பாடுக ளுக்கான விண்ணப்பங்களுக்குப் பொருந்தும். ஒவ்வொரு தனியார் வீட்டு மேம்பாடுகளுக்கும் உத்தே சிக்கப்பட்டு உள்ள ஒட்டுமொத்த தரைப் பகுதியை 85 சதுர மீட்டரால் வகுக்கக் கிடைக்கும் இடமே அதிகபட்ச வசிப்பிடமாக புதிய விதி குறிப்பிடுகிறது. தற்போது தெலுக் குராவ், கோவன், ஜூ சியாட், ஜாலான் யூனோஸ் ஆகிய நான்கு பகுதிகளில் அதிகமான தேவை உள் ளது. அவ்வட்டாரங்களில் ஒட்டு மொத்த தரைப் பகுதி 100 சதுர மீட்டரால் வகுக்கப்பட்டு வசிப்பிடப் பகுதி கணக்கிடப்படுகிறது.
இதே கணக்கீட்டைக் கொண்ட மேலும் அதிகமான பகுதிகள் புதிய விதியைக் கடைப்பிடிக்கும். மரீன் பரேட், ஜூ சியாட் =மவுண்ட்பேட்டன், தெலுக் குராவ் =ஜாலான் யூனோஸ், பாலஸ்தியர், ஸ்டீவன்ஸ்=சான்செரி, பாசிர் பாஞ் சாங், கோவன்=ஹவ் சன், ஷெல்ஃபோர்ட், லோயாங் போன்ற ஒன்பது பகுதிகள் அவை. பலபயன் மேம்பாடுகளுக்கான ஒரு சில பகுதிகளுக்கும் புதிய வழிமுறை பொருந்தும். சிங்கப்பூருக்கு வருகைபுரிந்த பயணிகளில் 15% வர்த்தகர்கள் உலக நாட்டினர் தரமான நிகழ்வு களுக்கு நாடி வரும் நாடாக சிங்கப்பூர் தொடருகிறது.
இவ்வாண்டின் முதல் பாதியில் சிங் கப்பூருக்கு வருகை புரிந்தோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு என்னும் அடிப்படையில் 7.7 விழுக் காடு உயர்ந்து 9.20 மில்லியன் ஆகியுள்ளதாக வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார். ஐடிபி ஏஷியா என்னும் சுற்றுலா வர்த்தக நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அவர், வருகையாளர்களில் 15 விழுக்காட்டினர் வர்த்தகர்கள் என்றும் தொழில் சம்பந்தமான கூட்டங்கள், ஊக்கப் பயணம், மாநாடுகள், கண்காட்சிகள் (BTMICE) ஆகியவற்றுக்காக வந்தவர்கள் அவர்கள் என்றும் கூறினார். அவ்வாறு வந்தவர்கள் செலவு செய்த தொகை கிட்டத்தட்ட $2.2 பில்லியன் அல்லது சிங்கப்பூரின் மொத்த சுற்றுப்பயண வருவாயில் 22 விழுக்காடு. சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கவும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் அவர்கள் செய்த செலவுகள் இதில் சேர்க்கப்பட வில்லை.
சாங்கி விமான நிலைய வருகையாளர் பகுதி. கோப்புப் படம்

