2040ல் சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுள் 85.4 ஆண்டுகளாக உயரும்

2040ல் சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுள் 85.4 ஆண்டுகளாக உயரும்

1 mins read

2040ஆம் ஆண்டில் சிங்கப்பூரர் களின் சராசரி ஆயுட்காலம் 85.4 ஆண்டுகளாக உயரும் என்று அமெரிக்காவின் சுகாதார அள வீட்டு, மதிப்பீட்டு நிலைய (ஐஎச்எம்இ) ஆய்வு கூறுகிறது. இரு ஆண்டுகளுக்குமுன், அதாவது 2016ஆம் ஆண்டில் சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுள் 83.3 ஆண்டுகளாக இருந்தது. மொத்தம் 195 நாடுகளில் 'ஆயுட்கால முன்னுரைப்பு 2040' குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சராசரி ஆயுட்காலமாக 85.8 ஆண்டுகளுடன் ஸ்பெயின் முதலாவதாகவும் 85.7 ஆண்டு களுடன் ஜப்பான் இரண்டாவதா கவும் வந்தன. கடந்த ஈராண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலவே இம் முறையும் சிங்கப்பூர் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. "சிங்கப்பூரின் இப்போதைய சுகாதார அமைப்பு முறைகள், முக்கிய சுகாதார இயக்கக் காரணிகளுக்குத் தீர்வளிக்கும் வகையில் செயல்திறன் மிக்கதாக இருக்கின்றன என்பதை எங்க ளது ஆய்வு முடிவுகள் காட்டு கின்றன," என்று 'ஐஎச்எம்இ'யின் அறிக்கை கூறுகிறது.