தீபாவளி நெருங்கி வரும் நேரத் தில் பொதுவாக லிட்டில் இந்தியா வில் வியாபாரம் பரபரப்பாக இருக் கும். ஆனால் இந்திய ரூபாய் மதிப்பு இறங்குமுகமாக இருந்து வருவதால் வாடிக்கையாளர்கள் செலவுசெய்ய ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்கிறார்கள். தீபாவளி நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் டன்லப் ஸ்திரீட்டில் இருக்கும் அப்போலோ செல்லப்பாஸ் கடை யில் வியாபாரம், தீபாவளி வியா பாரம் போல் இல்லை.
மேலும் பலரை எப்படி ஈர்ப்பது என்பது பற்றி தான் ஆராயப்போவ தாக கடையின் தலைமை நிர்வாகி சி. சங்கரநாதன் கூறுகிறார். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக நாடுகின்ற சில்லறை வர்த்தகக் கடைகள், விழாக் கால வியாபரம் சூடுபிடிக்காமல் இருப்ப தற்கு இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குவதே காரணம் என்று கூறுகின்றன. இத்தகையக் கடைகளின் வாடிக்கையாளர்கள் சிங்கப்பூரில் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பவே விரும்பு கிறார்கள். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இந்த மாதம் சாதனை அளவுக்கு இறங்கிவிட்டது.
எண்ணெய் விலைகள் அதிக மாகி இருப்பதால் இந்தியப் பொருளியலுக்கு மிரட்டல் ஏற்பட்டு இருக்கிறது என்றும் அதனால் ரூபாயின் மதிப்பில் மறைமுக பாதிப்பு இருக்கிறது என்றும் டிபிஎஸ் வங்கியின் பொருளியல் வல்லுநர் ராதிகா ராவ் கூறுகிறார். ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 53.52 ரூபாய் என்று கடந்த புதன் கிழமை வர்த்தகம் நடந்தது. ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த மதிப்பு ஒரு வெள்ளிக்கு 50.26 ரூபாயாக இருந்தது.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி ஒரு வெள்ளிக்கு 47.7783 ரூபாய் என்று பரிவர்த்தனை நடந்தது. இதனிடையே, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பணத்தை அனுப்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக பணம் அனுப்பும் நிறுவனங்கள் தெரிவிக் கின்றன.


