உதவி தேவைப்படுவதைப்போல் ஒருவர் நடிக்க, கடையில் திருடிய இளையர்கள்

உதவி தேவைப்படுவதைப்போல் ஒருவர் நடிக்க, கடையில் திருடிய இளையர்கள்

1 mins read
f84a70e8-ea90-4e8e-b814-d8084443f06d
-

லிட்டில் இந்தியாவில் சந்தர் ரோட்டில் இருக்கும் இயோ புவான் ஹெங் லிக்கர் ஷாப் மதுபானக் கடைக்கு தன் னுடைய இரண்டு நண்பர் களுடன் சென்ற ஒரு பதின்ம வயதுப் பையனின் காலில் ரத்தம் வடிந்ததைப் பார்த்த அந்தக் கடையின் உரிமையாளர் திருவாட்டி இரினி இயோ, 58, அந்த 18 வயது இளைஞனுக்கு உதவினார். அதேநேரத்தில் அந்தப் பையனுடன் வந்த நண்பர்கள் கடையிலிருந்து மதுபானத் தைத் திருடி பைகளில் வைத்துக்கொண்டனர்.

அந்தத் திருட்டு பற்றி அடுத்த நாள் தெரியவந்ததையடுத்து திருவாட்டி இயோ, தன் கடையின் வாடிக்கையாளரான அந்தப் பையனுடன் தொடர்புகொண்டு கேட்டார். அந்தப் பதின்ம வயது இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். திருடிய பொருட்களைக் கொண்டு வந்து தரும்படி கேட்டு அந்த மாது அந்த இளைஞர்களை மன்னித்து விட்டுவிட்டார். ஆனால் திருவாட்டி இயோவின் சகோதரரான ஜான் இயோ, 59, அடுத்த நாள் காலையில் கடையைத் திறந்தபோது கடை கன்னமிடப்பட்டு சூறையாடப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். கடைக்கு வந்த திருவாட்டி இயோ போலிசை அழைத்தார். பிறகு ஆறு பேர் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்கள் 14 வய துக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். போலிஸ் விசாரணை தொடர்கிறது. திருடப்பட்ட சிகரெட்டுகள், மதுபானம் போன்றவை மீட்கப்பட்டன.

கடையில் இருந்து திருடியதாகக் கூறப்படும் மதுபான போத்தலை திரு ஜான் இயோ காட்டுகிறார். படம்: தி நியூ பேப்பர்