கோடீஸ்வரர்கள் அடுத்த 5 ஆண்டில் 5.5% கூடும்

கோடீஸ்வரர்கள் அடுத்த 5 ஆண்டில் 5.5% கூடும்

1 mins read

சிங்கப்பூரில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2018 நடுப்பகுதி வரைப்பட்ட 12 மாத காலத்தில் 11.2% அதிகரித்து 183,737 பேராகி இருக்கிறது. இந்த எண் ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5.5% கூடி 239,640 பேராக உயரும் என்று கிரெடிட் சூயிஸ் ஆய்வுக் கழகத்தின் 2018 உலகப் பணக்காரர்கள் பட்டியல் தெரிவிக்கிறது. மொத்தம் US$50 மில்லியனுக் கும் அதிக சொத்து வைத்துள்ள பெரும் பணக்காரர்களின் எண் ணிக்கை, 2018 நடுப்பகுதி வாக் கில் சுமார் 1,000 பேராக இருந்தது.

இது 1.1% அதிகம் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூரில் குடும்பச் சொத்து வலுவாக 7.4% கூடி ஏறக்குறைய US$1.3 டிரிலியன் ஆனது. தனி ஒருவரின் சொத்து 5.3% கூடி US$283,000 ஆனது. இது உலகிலேயே ஆக அதிக மான சராசரிச் சொத்து வரிசை யில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. தனி ஒருவரின் சிங்கப்பூர் சொத்து 2000மாவது ஆண்டு முதல் 146%க்கும் அதிகமாகக் கூடியிருக்கிறது. அதிக சேமிப்பே முக்கிய காரணம். கடந்த 2005 முதல் 2012 வரைப்பட்ட சொத்து விலை ஏற்ற மும் பரிவர்த்தனை விகித உயர் வும் இதர காரணங்கள்.