சிங்கப்பூர்-ஆஸ்திரியா இணக்கம்

சிங்கப்பூர்-ஆஸ்திரியா இணக்கம்

1 mins read

சிங்கப்பூரும் ஆஸ்திரியாவும் மின்னிலக்கப் பொருளியல் பற்றிய தங்கள் அனுபவங்களையும் ஆற்றல்களையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன. மின்னிலக்க நிர்வாகம், கணினி வழி வர்த்தகம், மனித இயந்திரத் தொழில்நுட்பங்கள் முதலான துறைகளில் இரண்டும் ஒத்துழைக்க இருக்கின்றன. பிரதமர் லீ சியன் லூங் அந்த நாட்டுக்கு மேற்கொண்டு இருந்த பயணத்தின்போது மின்னிலக்கமயம், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு வகைசெய்யும் ஓர் உடன்பாட்டில் இரு தரப்புகளும் கையெழுத்திட்டன. சிங்கப்பூரின் தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரனும் ஆஸ்திரியாவின் மின்னிலக்க மற்றும் பொருளியல் விவகார அமைச்சர் மார்கரெட்டும் அதில் கையெழுத்திட்டனர்.