காயம் அடையும் ஊழியருக்குத் தேவைப்படும் விடுப்பைக் கொடுங்கள் - மனிதவள அமைச்சு

காயம் அடையும் ஊழியருக்குத் தேவைப்படும் விடுப்பைக் கொடுங்கள் - மனிதவள அமைச்சு

2 mins read
0c2284fe-5c97-448e-ace5-e87acac9c862
-

வேலையிடத்தில் காயம் அடையும் ஊழியர்களுக்குத் தேவைப்படக் கூடிய விடுப்பைச் சில மருத்துவர் கள் வழங்குவது இல்லை என்று மனிதவள அமைச்சு கவலை அடைந்து இருக்கிறது. அமைச்சு, சென்ற ஆண்டு முதல் இதுவரை மூன்று மருத்துவர் களை சிங்கப்பூர் மருத்துவ மன்றத் திடம் அனுப்பிவைத்துள்ளது. அந்த மன்றம், அந்த மருத்துவர் கள் சம்பந்தப்பட்ட இத்தகைய விவகாரங்கள் பற்றி புலன்விசா ரணை நடத்தி வருகிறது. மனிதவள அமைச்சும் சுகாதார அமைச்சும் எல்லா மருத்துவர் களுக்கும் சென்ற மாதம் பொது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பின.

வேலையிடங்களில் காயம் அடைந்துவிடும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பை வழங்க வேண்டிய தேவை பற்றி அந்தச் சுற்றறிக்கை மருத்துவர்களை நினைவூட்டியது. காயத்தோடு ஓர் ஊழியர் வேலைக்குத் திரும்பவேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர் உடலில் இருக்கும் காயம் ஆறாமல் அதிகரித்து அதனால் அவர் முழு மையாகக் குணம் அடையும் வாய்ப்பு குறைந்துவிடக்கூடும் என்பதே முக்கிய கவலையாக இருக்கிறது என்று அந்தச் சுற்ற றிக்கை தெரிவித்துள்ளது.

ஊழியர் ஒருவர் குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அல்லது மூன்று நாட்களுக்கும் அதிக நாட்கள் மருத்துவச் சான் றிதழ் கொடுக்கப்பட்டு இருந்தால் அத்தகைய விவகாரம் பற்றி முத லாளிகள் மனிதவள அமைச்சிடம் தெரியப்படுத்திவிடவேண்டும். இருந்தாலும் குறைந்த நாட்கள் மருத்துவ விடுப்பு கொடுக்கும்படி யும் அதன்மூலம் காயத்தின் கடு மையைக் குறைத்து தெரிவிக்கும் படியும் அல்லது ஊழியர்களுக்கு விடுப்பு கொடுக்காமல் அவருக்கு எளிமையான வேலைகளைக் கொடுக்க பரிந்துரைக்கும்படியும் மருத்துவர்களைச் சில முதலாளி கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்று அமைச்சுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக அந்தச் சுற்ற றிக்கை தெரிவித்தது.. ST PHOTO