பிரதமர் லீ: தாராள உடன்பாடு பிரிட்டனுக்கும் நன்மை தரும்

பிரதமர் லீ: தாராள உடன்பாடு பிரிட்டனுக்கும் நன்மை தரும்

1 mins read
88a28544-542d-4468-a30e-9542de0c4cfe
-

ஐரோப்பிய ஒன்றியம் - சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்பாட்டின் நன்மைகள் பிரிட்டனுக்கு ஒரு தனிப்பட்ட உடன்பாடு மூலம் கிடைப்பதை சிங்கப்பூர் வரவேற்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அந்த உடன்பாடு நேரடியாக பிரிட்டனுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் என்று பிபிசி வானொலி 4க்கு பிரஸ்ஸல்ஸ் நகரில் அளித்த பேட்டியில் திரு லீ குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இடம்பெறவில்லை என்றால் சிங்கப்பூர் தரப்பிலிருந்து அந்த உடன்பாடு பிரிட்டனுக்கு தொடர்ந்து நன்மைபயக்கும் என்று திரு லீ தெரிவித்தார். சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன் றியமும் தாராள வர்த்தக உடன் பாட்டில் நேற்று கையெழுத்திட இருந்தன. அந்த உடன்பாடு ஒன்று மற்றொன்றின் சந்தை களை எட்டுவதற்கு மேலும் கதவு களைத் திறந்துவிடும். அறிவுச் சொத்து உரிமைகளை அது பாதுகாக்கும்.

"சிங்கப்பூர்=ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடு பரந்த வர்த்தக உடன்பாடு. அது உயர்தர ஏற்பாடு. அந்த உடன்பாடு மற்ற நாடுகளுக்கும் ஊக்கமூட்டும் என்று நான் நம்புகிறேன்," என திரு லீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்