மின்சக்தி ஏற்றியபோது மின்ஸ்கூட்டர் தீப்பிடித்தது

மின்சக்தி ஏற்றியபோது மின்ஸ்கூட்டர் தீப்பிடித்தது

1 mins read
9664f801-ec2b-4e02-b39d-053e3607688d
-
Google News Preferred Icon

பாசிர் ரிஸ் ஸ்திரீட் 13ல் இருக் கும் 147வது புளோக்கில் வியா ழக்கிழமை அதிகாலை சுமார் 1.40 மணிக்கு மின்சக்தி ஏற்றிக் கொண்டிருந்த மின்ஸ்கூட்டர் ஒன்றில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது. தகவல் கிடைத்ததையடுத்து அந்த புளோக்கின் வெற்றுத் தளத்திற்கு விரைந்த போலிசார் அங்கிருந்த பயனீட்டு அறையைப் பலவந்தமாக திறந்தனர். அறை முழுவதும் தீ பரவி இருந்தது. பயனீட்டு அறையிலிருந்து வியாழக்கிழமை சாய டப்பாக்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் ஊழியர்கள் அகற்றியதைப் பார்த் ததாக சிலர் கூறினர். மின்ஸ்கூட்டர் காரணமாக தீ மூண்டு அதனால் ஏற்பட்ட புகை கடுமையாக இருந்தது என்றும் அது தன் வீட்டின் குளிர்சாதன அறைக்குள் புகுந்து தன்னை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட் டது என்றும் குமார் என்று தன்னை தெரிவித்த குடியிருப் பாளர் ஒருவர் கூறினார்.

.PHOTOS: MS TAN, MRS KUMAR