'வர்த்தகப் போரைச் சமாளிக்க உலகம் ஆயத்தமாக வேண்டும்'

'வர்த்தகப் போரைச் சமாளிக்க உலகம் ஆயத்தமாக வேண்டும்'

1 mins read
73c8ccf8-7cb2-4863-8f72-e5e83dfa273c
-
Google News Preferred Icon

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூண்டிருக்கும் வர்த் தகப் போர்மேகம் அகல்வதற் கான அறிகுறி எதுவும் தெரியாத நிலையில், அந்தப் பிரச்சினை இன்னும் சிரமமான நிலைக்கு போகக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று சிங்கப்பூரின் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் எச்சரித்து இருக்கிறார். வர்த்தகப்போர் கொஞ்ச காலத்திற்கு நீடிக்கும் என்பதால் அதற்கு நாம் ஆயத்தமாக வேண்டியிருக்கும் என்று நேற்று அவர் தெரிவித்தார்.

இருந்தாலும் அந்தப் போரை தணிக்க நாம் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சீனாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்த திரு ஹெங், நேற்று சிங்கப்பூர் ஊடகத்திடம் பேசினார். சீன பயணத்தின்போது அந்த நாட்டின் முக்கிய பேராளர்களை அமைச்சர் சந்தித்தார். வர்த்தகப் போர் தலைதூக்கும் சூழ்நிலை யில், இந்த வட்டாரத்தில் நாம் தாராள வர்த்தக வேகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு தொடர்பில் முன்ன தாகவே நல்ல முடிவுகள் இடம் பெறும் என்று நம்பிக்கை தெரி வித்தார்.

இந்த உடன்பாட்டில் 10 ஆசி யான் நாடுகளும் சீனா உள்ளிட்ட அதனுடைய ஆறு தாராள வர்த் தக உடன்பாட்டு பங்காளி நாடுகளும் உள்ளடங்கும்.