முதலாவது ஆகாய பாதுகாப்பு நெறிமுறை பிரகடனம்

முதலாவது ஆகாய பாதுகாப்பு நெறிமுறை பிரகடனம்

1 mins read
a4f3e4ac-a407-492c-a194-6359f8911785
-

உலகின் முதலாவது பலதரப்பு ஆகாய வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய பிரகடனத்தில் ஆசியான் தற்காப்புத் தலைவர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். ஆகாயத்தில் பறக்கும் ராணுவ விமானங்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடுக்கடலில் வன்செயல்களைத் தவிர்க்கவும் அந்த நெறிமுறைகள் உருவாக்கப் பட்டு இருக்கின்றன. அவை கடற்படை கலன்களுக்கு உரிய நடப்பு வழமைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடக்கும் வருடாந் திர ஆசியான் தற்காப்பு அமைச் சர்கள் கூட்டத்தில் நேற்று ஆசியானில் அங்கம் வகிக்கும் 10 உறுப்பு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் அந்தப் பிரகடனத் தில் கையெழுத்திட்டனர்.

அதன் மூலம் அவர்கள் வட்டார அமைதியையும் நிலைப்பாட்டையும் மேம்படுத்த உறுதி தெரிவித்தனர். அதோடு, பயங்கரவாதத்தை எதிர்க்கவும் ஆகாய, கடல் பாது காப்பை உறுதிப்படுத்தவும் இணை யப் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் ஒத்துழைப்பை அதிகப்படுத்த அமைச்சர்கள் உறுதி கூறினர். பயங்கரவாத குழுக்கள், போக் கிரி நாடுகள் விடுக்கும் ரசாயன, உயிர்க்கொல்லி மற்றும் கதிரியக்க மிரட்டல்களைச் சமாளிக்க வல்லுநர்கள் அடங்கிய கட்டமைப்பு ஒன்றை ஆசியான் அமைச்சர்கள் அமைக்க விருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் நடக்கும் வருடாந்திர ஆசியான் கூட்டத்தில் 10 ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள், கூட்டுப் பிரகடனம் ஒன்றில் நேற்றுக் கையெழுத்திட்டனர். படம்: ஏஎஃப்பி