பொது உதவி மனப்பான்மை: போலிஸ் விருது வழங்கியது

பொது உதவி மனப்பான்மை: போலிஸ் விருது வழங்கியது

1 mins read
03d2c115-65d9-470d-8cab-890e378021f8
-

சாலை சந்திப்பு ஒன்றில் தானே முன்வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ஒருவருக்கு பொது உதவி மனப்பான்மை விருது வழங்கப்பட்டது. திரு சுகார்னோ அர்சாத் என்பவர் பாயலேபார் ரோட்டில் வியாழனன்று மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மெக்பர்சன் ரோடு சந்திப்பில் போக்குவரத்து விளக்கு எரியாமல் போனதைப் பார்த்தார். உடனடியாக அவர் தானே முன்வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சேவையில் ஈடுபட்டார்.

பாயலேபார் ரோடும் மெக்பர்சன் ரோடும் சந்திக்கும் இடத்தில் பொது உதவி மனப்பான்மையுடன் செயல்பட்ட திரு சுகார்னோ, போக்குவரத்து போலிஸ் தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார் என்று போலிஸ் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. போக்குவரத்து போலிஸ் தளபதியான மூத்த உதவி ஆணையர் ஜெரால்ட் லிம், சாலை பாதுகாப்பு என்பது எல்லாருக்கும் உரிய பொறுப்பு என்பதை வலியுறுத்தினார்.

போக்குவரத்து போலிஸ் தளபதியான மூத்த உதவி ஆணையர் ஜெரால்ட் லிம், நேற்று திரு சுகார்னோ அர்சாத்துக்கு விருது வழங்கினார். படம்: சிங்கப்பூர் போலிஸ்