கல்வி அமைச்சின் வருடாந்திரப் பணியிடமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் மாதத்தில் 66 பள்ளிகளுக்குப் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவர். அந்த 66 பள்ளிகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நான்கு தொடக்கக்கல்லூரிகளும் அடங் கும். தற்போது சிராங்கூன் தொடக்கக்கல்லூரியின் முதல்வராக இருக்கும் திரு மனோகரன் சுப்பையா, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். ஜூரோங் தொடக்கக்கல்லூரியின் முதல்வராக இருக்கும் டாக்டர் ஹாங் கிம் ஹூ, ஜூரோங் பைனியர் தொடக்கக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரியின் முதல்வராக இருக்கும் குமாரி பெமலா யூங் நியோக் கே, தெம்பனிஸ் மெரி டியன் தொடக்கக் கல்லூரிக்குத் தலைமை தாங்குவார். இன்னோவா தொடக்கக் கல்லூரியின் முதல்வரான திரு மைக்கல் நெல்சன், ஈசூன் இன்னோவா தொடக்கக்கல்லூரி யின் முதல்வராகப் பொறுப் பேற்கிறார்.
66 பள்ளிகளில் புதிய முதல்வர்கள் நியமனம்
1 mins read
-

