பக்கவாதம் பாதித்தவர்களுக்கு ஆதரவாக இருநாள் நிகழ்ச்சி

2 mins read
c4284748-fb88-4dcf-bca1-3d8e126829ee
-

உலக பக்கவாத நாள் அக்டோபர் 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூரின் பக்கவாத நிலையமும் (S3) சிங்கப்பூர் தேசிய பக்கவாதச் சங்கமும் (SNSA) சுகாதார அமைச்சின் பக்கவாதச் சேவை மேம்பாட்டு பிரிவுடன் (SSI) சேர்ந்து இருநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. தோ பாயோ வீவக மையத்தில் நேற்றும் இன்றும் நடக்கும் அந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டலாம் என்று ஏற்பாட்டு அமைப்புகள் நம்பு கின்றன.

பக்கவாதம் தொடர்பிலான போதனை முயற்சிகள் வழியாகவும் பொதுமக்களில் பலரையும் எட்டு வதன் மூலமாகவும் சமூக ஆதர வைப் பெறலாம் என்றும் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்குத் துணிச்சலையும் நம்பிக் கையையும் ஊட்டி அவர்கள் சமூகத்தில் மறுபடியும் ஒருங் கிணைய உதவலாம் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. அந்த நிகழ்ச்சிக்கு செல்வோர் அங்கு மருத்துவ நிபுணர்கள், உடற்பயிற்சி வல்லுநர்கள் நடத்தும் உரையைச் செவிமடுக்கலாம்.

இருவழி விளையாட்டுகளில் கலந்துகொள்ளலாம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்குப் பராமரிப்புச் சேவையை வழங்குபவர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, பொதுமக்களுக்கு மருத்துவச் சோதனை பலவும் அங்கு உண்டு. சிங்கப்பூரில் மரணத்திற்குரிய முக்கிய காரணங்களில் பக்கவாதம் நான்காவது இடத்தில் உள்ளது. உடலில் மூளைக்கு ரத்தம் செல் வது தடைபடும்போது பக்கவாதம் பாதிக்கிறது.

இந்தச் சிறார்கள் உட்பட பொது மக்களில் 80 பேர் சாப்பாட்டு குச்சிகளைப் பயன்படுத்தி பளிங்குக் குண்டுகளை ஆக அதிகமாக நகர்த்தி முதல் தடவையாக சாதனை படைத்தனர். படம்: சிங்கப்பூர் பக்கவாத நிலையம்