ஆகாயத்தில் ராணுவ விமானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வதற்கான புதிய பலதரப்பு வழி காட்டி நெறிமுறைகளுக்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளன. அந்த நெறிமுறைகள் அடங்கிய பிரகடனத்தில் ஆசியானின் 10 நாடுகளும் ஏற்கெனவே கையெழுத் திட்டு இருக்கின்றன. உலகின் மாபெரும் பொருளியல் நாடுகளான அமெரிக்காவும் சீனா வும் ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், நியூசி லாந்து, ரஷ்யா, தென்கொரியா நாடுகளும் அந்த உடன்பாட்டில் சேர்ந்துகொள்ள கொள்கை அளவில் இணங்கி இருக்கின்றன.
புதிய நெறிமுறைகள் அடங்கிய பிரகடனத்தை வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் ஆசியான் ஏற்றுக் கொண்டது. சிங்கப்பூரில் 18 நாடு களின் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்திற் குப் பிறகு நேற்று விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கை இந்த விவரங் களைத் தெரிவித்தது. புதிய வழிகாட்டி நெறிமுறைகள், இப்போது கடல் வழிகளில் நடப் பில் இருக்கும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிங்கப்பூரில் நடந்த தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

