எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத் தின் பேருந்து ஓட்டுநர் ஒருவர் அக்டோபர் 12ஆம் தேதி அபாய கரமான முறையில் வாகனத்தை ஓட்டியதற்காக நடவடிக்கைக்கு ஆளாக இருக்கிறார். ஃபுல்லர்டன் ஹோட்டல், எஸ்பிளனெட் டிரைவ் இரண்டும் சந்திக்கும் இடத்தில் ஒரு பேருந்து சென்றுகொண்டிருந் ததை ஃபேஸ்புக் பக்கத்தில் பதி வேற்றப்பட்ட ஒரு காணொளி காட்டியது. அந்தச் சேவை எண் 57 பேருந்து மூன்று தடங்களைக் கடந்து இடது பக்கமாக ஒரு பேருந்து நிறுத்தும் இடத்திற்குச் சென்றது தெரிந்தது. பிறகு அது இரண்டு தடங்களைக் கடந்து வலது புறமாக சென்றது. அந்தப் பேருந்து ஓட்டுநருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் தொடர் புத் துறை துணைத் தலைவர் திருவாட்டி டாமி டான் கூறினார்.
ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டினார்
1 mins read

