புக்கிட் தீமா ரோடு சாலை விபத்தில் இருவர் மரணம்

1 mins read
6513556b-6875-4c9c-800a-24ec0620990e
-

புக்கிட் தீமா ரோட்டில் நேற்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் இரண்டு ஆடவர்கள் பலியாகிவிட்டனர். அவர்களுக்கு வயது 25 மற்றும் 42 என்பது தெரியவந்துள்ளது. வேறு ஓர் ஆடவர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட் டார். காயம் அடைந்த இவருக்கு வயது 25. புக்கிட் தீமா ரோடும் மெக்கென்சி ரோடும் சந்திக்கும் இடத்தில் அதிகாலை சுமார் 3.10 மணிக்கு அந்த விபத்து பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் இரண்டு பேர் மாண்டுவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவர்கள் இருந்த வேன் வாகனம் கே கே மருத்துவமனைக்கு அருகே சாலையில் சறுக்கிக் கொண்டு ஒரு மரத்தில் மோதி விட்டதாகத் தெரிகிறது. விபத்தில் மாண்டவர்கள் இருவரும் வேனில் இருந்த பயணிகள் என்றும் அந்த வேன் ஓட்டுநர் காயம் அடைந்தார் என்றும் போலிஸ் தெரிவித்தது. அந்த ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மூர்க்கமாக வாகனத்தை ஓட்டியதற்காக பிறகு அவர் கைது செய்யப்பட்ட தாகவும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

விபத்தில் சிக்கிய வேன் இந்தக் கதியானது. படம்: ‌ஷின் மின்