உயரத்திலிருந்து விழுந்து மாண்ட ஊழியர்

உயரத்திலிருந்து விழுந்து மாண்ட ஊழியர்

1 mins read
Google News Preferred Icon

துவாஸ் சவுத் வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் தளத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் நிகழ்ந்தது. அந்த 49 வயது ஊழியர் 14 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எல்டிராக்கோ ரூஃபிங் சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியர். பிற்பகல் 3.50 மணி அளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டது.

பட்டறை ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்ததாகவும் அந்தப் பட்டறையின் உட்கூரையில் உள்ள துத்தநாகத் தகடுகளை அந்த ஊழியர் அடுக்கிக்கொண்டிருந்த தாகவும் மனிதவள அமைச்சு கூறியது. அப்போது அங்கிருந்து மின்சாரத் தடை பொருள் ஒன்றின் மீது அவரது கால்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர் தடுக்கி விழுந்து மாண்டதாக அமைச்சு கூறியது. ஊழியரின் மரணம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட கட்டுமானத் தளத்தில் உயரத்திலிருந்து செய் யப்படும் பணிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.