மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் கலவரத் தடுப்பு போலிஸ்

மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் கலவரத் தடுப்பு போலிஸ்

1 mins read
Google News Preferred Icon

கடுமையான பயிற்சி, மேம்படுத் தப்பட்ட ஆயுதங்களுடன் சிங்கப் பூரின் கலவரத் தடுப்பு போலிஸ் படையின் சிறப்புப் பிரிவு நெருக் கடிநிலைகளுக்குத் தயாராகி வருகிறது. 'பி4' ரக ரைஃபிள் களை ஏந்திக்கொண்டு கண்ணீர் புகைக்கு ஈடான எரிச்சல் உண்டாக்கக்கூடிய பொருள் கொண்ட ரப்பர் தோட்டாக்களை அதிகாரிகள் பயன்படுத்தலாம். கலவரக்காரர்களை அடையாளம் காண ரப்பர் தோட்டாக்களில் சாயம் பூசப்பட்டிருக்கும்.

2015ஆம் ஆண்டு மே மாதத்தில் மேம்படுத்தப்பட்ட 'பி4' ஆயுதத்தை கலவரத் தடுப்பு போலிஸ் படை அறிமுகப்படுத்தி இருந்தது. அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற போலிஸ் பணித்திட்டக் கருத்தரங்கில் மேம் படுத்தப்பட்ட 'பி4' ஆயுதத்தின் நகல் அறிமுகப்படுத்தப்பட்டது. கலவரத் தடுப்பு போலிசாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புத்தாக்கமிக்கப் பல்வேறு மேம் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட ஆயுதங் களில் கூடுதல் தோட்டாக்களைப் பொருத்த வசதி செய்யப் பட்டுள்ளது.

கலவரத் தடுப்பு போலிஸின் சிறப்புப் பிரிவு பொது இடங்களில் அமைதியை நிலை நாட்ட உதவுகிறது. கலகங்கள், கலவரங்கள் போன்ற வன்முறை அதிகமுள்ள நெருக்கடிநிலைகளை அப்பிரிவு எதிர்கொள்கிறது. மரியா ஹெர்டோக் கலவரத்தை அடுத்து 1950களில் சிங்கப்பூரில் கலவரத் தடுப்பு போலிஸ் பிரிவு அமைக்கப்பட்டது.