உலகில் பலதரப்பு வர்த்தக முறைக்கு வலுவான ஆதரவு இருப்பதாகவும் இருந்தாலும் அந்த ஏற்பாட்டை புதுப்பிக்க முயற்சிகள் தேவைப்படுவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். பலதரப்பு வர்த்தக முறையில் பதற்றங்கள் தலைதூக்கி இருப்ப தாகக் குறிப்பிட்ட திரு லீ, அந்த முறையைப் புதுப்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று தான் வலியுறுத்தி வருவதற்கு இதுவே காரணம் என்றார். கணினி வழி வர்த்தகம், இணையப் பாதுகாப்பு போன்ற புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் அத்தகைய புதுப்பிப்பு முயற்சிகளில் உள்ளடங் கும் என்றும் திரு லீ தெரிவித்தார்.
"சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன் றியமும் வர்த்தகத்திற்குத் தங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக் கின்றன. தாராள வர்த்தகம், தாராளமயமாக்கம், ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது மற்றும் ஒத்துழைப் புக் கோட்பாடுகளுக்கு அந்த இரண்டு தரப்புகளும் கடப்பாடு கொண்டிருக்கின்றன என்பதையே வெள்ளிக்கிழமை கையெழுத்தான தாராள வர்த்தக உடன்பாடு எடுத்துக் காட்டுகிறது," என்று பிரதமர் குறிப்பிட்டார். இதர நாடுகளும் இத்தகைய தாராள வர்த்தக முறையை நிலை நாட்டி வரும் என்றும் அனைவருக் கும் பலன் அளிக்கக்கூடிய பல தரப்பு வர்த்தக முறையை அவை ஆதரிக்கும் என்று நம்புவதாகவும் திரு லீ தெரிவித்தார்.

