சிறார் பாதுகாப்பு நிலைய ஊழியர்களுக்கு பாராட்டு

சிறார் பாதுகாப்பு நிலைய ஊழியர்களுக்கு பாராட்டு

2 mins read

துணியை உலர்த்தும் கருவிகள், துணிமணிகள் தொங்க விடப்படும் 'ஹேங்கர்' போன்வற்றைப் பார்த் தால் பல சிறார்களுக்கு அவற்றை வைத்து விளையாடத் தோன்றும். ஆனால், சகோதரர் இருவருக்கு இதைப் பார்த்தால் பயம்தான் வரும். நான்கு, ஆறு வயது சிறு வர்களான அந்த இருவரையும் அந்தச் சிறுவர்களின் பெற்றோர் இவற்றைக் கொண்டு தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த இரு சிறார்களும் மெது வளர்ச்சியுடைய சிறார்கள் என்ப தால் அவர்களுக்கு சிறப்பு கவனிப் புத் தேவை இருந்தது.

இதை அறியாத இந்தச் சிறு வர்களின் பெற்றோர் அவர்களை வழிக்கு கொண்டுவர, ஒழுங்கு படுத்துவதாக நினைத்து அந்தச் சிறுவர்களைத் துன்புறுத்தியுள்ள னர். நல்லவேளையாக 'பிக் லவ் சைல்ட் புரொட்டெக்ஷன் ஸ்பெஷ லிஸ்ட் சென்டர்' எனும் சிறார் பாதுகாப்பு அமைப்பின் தலையீட் டால் இந்தச் சிறுவர்கள் இருவரும் தற்பொழுது பாதுகாப்பாக உள்ள னர். 'மோண்ஃபர்ட் கேர்' என்ற கொடை நிறுவனம் நடத்திவரும் இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு சமூக ஊழியர் இந்தச் சிறார்களை பெற்றோராக எவ்வாறு பராமரிப்பது என்ற 10 மாத பயிற்சித் திட்டத்தின் கீழ் அந்தப் பெற்றோருக்கு உதவி புரிந்தார்.

இதை நேற்று 'பிக் லவ்' அமைப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்தச் சம்பவம் பற்றி விவரித்தார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ. "உங்களுடைய பணி எளிதான ஒன்றல்ல. குடும்பங்களுடன் ஈடு பாடு கொண்டு சில சூழல்கள் சிறாரின் பாதுகாப்புக்கு உகந்த தல்ல என்பதை அந்தக் குடும்பங் கள் புரிந்துகொள்ள நீங்கள் உதவ வேண்டியுள்ளது. "அதே சமயம், அந்தக் குடும் பங்களின் நம்பிக்கையைப் பெற்று நீங்கள் ஆற்றும் பணி குடும்பங் களை ஒற்றுமையாக வைத்திருப்பதையே இலக்காகக் கொண்டது என்ற உறுதியையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்," என்று கூறி னார்.