பேருந்து நிறுத்த இருக்கைகளின் விலை $500 முதல் $1,500 வரை

பேருந்து நிறுத்த இருக்கைகளின் விலை $500 முதல் $1,500 வரை

1 mins read
fa27fa53-39b7-4d77-aa0a-daad78e19c91
-

சிங்கப்பூரில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பொருத்தப்பட் டிருக்கும் இருக்கைகளின் விலை $500 முதல் $1,500 வரை இருக்கும் என்றும் அந்த விலையில் பொருத்தும் கட்டணங் கள் சேர்க்கப்படவில்லை என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. பீஷானில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து திரு டான் கெ வெய் இருக்கையைப் பெயர்த்தெடுத்து தம் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பவம் குறித்த அண்மைய செய்தி பற்றி எழுப்பப்பட்ட ஊடக கேள்விகளுக்கு ஆணையம் பதிலளித் தது.

பேருந்து நிறுத்தங்களில் உள்ள இருக்கைகள் குறை வான பராமரிப்புடன் சுமார் 20 ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கும். அந்த இருக்கைகளின் விலை அதன் அம்சங்கள், அதைச் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகிய வற்றைப் பொறுத்துள்ளது என்றும் ஆணையம் விவரித்தது. "உதாரணத்துக்கு பழைய இருக்கைகள் கான்கிரிட்டாலும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலாலும் செய்யப்பட்டவையாக இருந்தன. தற்போதுள்ளவை அலுமினியத்தால் செய்யப்பட்டவை. மேலும் அதில் கைத்தாங்கிகள் இருக்கும். அது முதியவர்கள் இருக் கையிலிருந்து எழும்போது, கைகளை ஊன்றி எழ உதவி யாக இருக்கும்," என்றும் ஆணையத்தின் பேச்சாளர் சொன் னார். சிங்கப்பூரில் தற்போது பல்வேறு வடிவங்களில் சுமார் 5,000 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன என்றும் திரு டான் பெயர்த்தெடுத்த இருக்கையின் விலை $1,300 என்றும் அதை பொருத்தும் கட்டணம் $200 என்றும் கூறப்பட்டது.