மெர்டேக்கா தலைமுறைக்கு வாழ்நாள் உதவி

மெர்டேக்கா தலைமுறைக்கு வாழ்நாள் உதவி

2 mins read
6c623a43-ca58-4852-b729-a4fe3bc063af
-
Google News Preferred Icon

முன்னோடித் தலைமுறைத் திட்டம், மெர்டேக்கா திட்டம் ஆகியவற் றைத் தொடர்ந்து அடுத்தபடியாக, மாஜுலா திட்டம் பற்றிய முடிவை தனது அரசியல் வாரிசுகளிடம் விட்டுவிடுவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் குடிமக்களில் 1950 ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த சுமார் 450,000 பேரை உள்ளடக்கி முன்னோடித் தலைமுறைத் திட்டம் நடப்புக்கு வந்தது. அடுத்ததாக 1950 முதல் 1959 வரை பிறந்த குடிமக்களுக்காக மெர்டேக்கா தலைமுறைத் திட்டம் நடப்புக்கு வரவிருக்கிறது. இந்த இரு திட்டங்களையும் தொடர்ந்து அடுத்தபடியாக மாஜுலா தலைமுறைத் திட்டம் என்ற மேலும் ஒரு உதவித் திட்டம் நடப்புக்கு வரக்கூடும் என்ற பேச்சு அடிபடுகிறது. இது பற்றி தெரிவித்தபோது திரு லீ அவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு பிரதமர் ஆற்றிய தேசிய நாள் பேரணி உரை பற்றிய கலந்துரையாடல் கூட்டம் இம் மாதம் 14ஆம் தேதி சி யுவான் சமூக மன்றத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட சமூகத் தலைவர் களிடையே, பிரதமர் லீ உரையாற் றினார். அப்போது அவர் தான் தேசிய நாள் பேரணியில் தெரிவித்த பல அம்சங்கள் பற்றியும் விவரித்தார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு ஆல்வின் என்பவர், மெர்டேக்கா தலைமுறைத் திட்டம் பற்றி எழுப்பிய கேள்விக்குத் திரு லீ விளக்கம் அளித்தார்.

மெர்டேக்கா தலைமுறைத் திட் டம் 500,000 பேரை உள்ளடக்கும் என்று தோராயமாக மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது இனிமேல்தான் கணக்கிடப்படும் என்றும் திரு லீ குறிப்பிட்டார். இப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இந்தத் திட்டம் நிறை வேற்றப்படும் என்று கூறிய திரு லீ, நாம் சேமித்து வைத்திருக்கும் தொகையிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவைத்து அதன் மூலம் மெர்டேக்கா தலை முறையினருக்கு வாழ்நாள் முழு வதும் உதவமுடியும் என்றார். இதனால் எதிர்கால அரசாங்கத் திற்கோ எதிர்கால வாக்காளர் களுக்கோ எந்தச் சுமையும் ஏற் படாது என்று அவர் தெரிவித்தார்.

முன்னோடித் தலைமுறைத் திட்டம், மெர்டேக்கா திட்டம் ஆகியவற்றுக்கு அடுத்தாற்போல் மாஜுலா தலைமுறைத் திட்டம் பற்றி தமக்குத் தெரியாது என்று குறிப்பிட்ட திரு லீ, அப்படி ஒரு திட்டம் நடப்புக்கு வருவது அர சாங்கத்திற்குக் கட்டுப்படியாகுமா என்பதைப் பொறுத்திருக்கும் என் றார். மெர்டேக்கா தலைமுறைக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அதிக மத்திய சேம நிதி சேமிப்பு, அதிக வருவாய் இருக்கும். இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் முந்தைய தலை முறைகளைச் சேர்ந்தவர்களைப் போல் அல்லாமல் நாட்டின் வளர்ச் சியின் முழு அனுகூலங்களையும் பயன்படுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அத்தகைய ஒரு திட்டத் திற்கான முடிவை தான் தனது அரசியல் வாரிசுகளிடம் விட்டுவிடு வதாக திரு லீ குறிப்பிட்டார்.