வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: சமாளிக்க பல உதவிகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: சமாளிக்க பல உதவிகள்

1 mins read

சிங்கப்பூரில் கடந்த இரண்டு அல் லது மூன்றாண்டுகளில் குறைந்த வருமான குடும்பங்களின் வரு வாய் வாழ்க்கைச் செலவைவிட அதிகமாக கூடியிருக்கிறது. இருந்தாலும் இன்னமும் சில குடும்பங்களின் வருமானம் போதிய அளவுக்கு அதிகரிக்க வில்லை என்பதால் இத்தகைய உதவி தேவைப்படும் குடும்பங் களுக்கு அரசாங்கம் முடிந்த உத வியைச் செய்யும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். இப்படி உதவ வேண்டும் என்ப தற்காகவே பல்வேறு உதவித் திட் டங்கள் நடப்புக்கு வந்திருப்ப தாகவும் திரு லீ சமூக கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் கூறினார்.

ஜிஎஸ்டி வரி, மின்சாரம், உணவு, தண்ணீர், பெட்ரோல் போன்றவற்றின் கட்டணம் அதிக ரிப்பதாக வரும் தகவல்கள் பற்றியும் குறைந்த வருமான குடும்பத்தினரும் முதியவர்களும் எதிர்நோக்கும் போராட்டங்கள் பற்றியும் சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை திருவாட்டி ஜெஸ்லின் சுட்டினார். அரசாங்கம் புள்ளிவிவரங் களைக் காட்டி மக்களின் வருமா னம் பெருகியுள்ளது என்கிறது. அதேவேளையில், சாதாரண உடல் உழைப்பு ஊழியர்களைப் பொறுத்த வரையில் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க அவர்கள் சிரமப்படு கிறார்கள் என்று கூறி, திரு லீயிடம் அவர் விளக்கம் கேட்டார்.