வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி வீடுகள் 99 ஆண்டு குத்தகைக்குக் கொடுக்கப்படுவது நியாயமான ஓர் ஏற்பாடுதான் என்று பிரதமர் லீ சியன் லூங் விளக்கமளித்தார். கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட ஜாலான் காயூ வைச் சேர்ந்த திரு என்பவர் எழுப்பிய கேள்விக்குத் திரு லீ விளக்கமளித்தார். ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுத்து நீங்கள் மானிய விலையில் ஒரு சொத்தை வாங்குகிறீர்கள். ஐந்தாண்டு காலம் அதில் வசித்து விட்டு அதை நீங்கள் விற்கலாம். பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வீட்டை நீங்கள் வாட கைக்கு விடலாம். அரசாங்கத் திடம் எஞ்சிய குத்தகைக் காலத்தைக் கொடுத்து காசாக்க லாம். 99 ஆண்டு குத்தகை உள்ள வீட்டை வாங்குகிறீர் கள். உங்களுக்கு 30 வயதாகும் போது திருமணம் நடக்கிறது. 70 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள்.
அந்த வயதில், உங்கள் வீட் டுக்கு 59 ஆண்டு குத்தகை காலம் எஞ்சியிருக்கும். நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் அது போதுமானது. நீங்கள் 90 வயது வரை வாழ்கிறீர்கள் என்றால் அப்போ தும் 30 முதல் 40 ஆண்டு கால குத்தகைக் காலம் எஞ்சியிருக் கும். அந்த வீடு அப்போதும் நல்ல மதிப்புடன் இருக்கும். அதை நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது உங்கள் பிள்ளை களுக்குக் கொடுக்கலாம். அவர்கள் அதில் வசிக்க விரும்பவில்லை என்றால் வீட்டை விற்றுவிடலாம்.
வீவகவிடமே வீட்டை திருப்பி வேண்டுமானாலும் கொடுக்கலாம். 99 ஆண்டு குத்தகை முடிந்ததும் வீடு அரசாங்கத்திற்குத் திரும்பி விடும். அந்த வீட்டை 99 ஆண்டு காலம் நீங்கள் அனு பவித்த பிறகு வீடு அரசாங்கத் திற்குத் திரும்புகிறது. அந்த இடத்தை அரசாங்கம் மறுபுழக் கத்திற்குப் பயன்படுத்தி மறு உருவாக்கம் செய்கிறது. அதை மற்றவர் பயன்படுத்துவர். இது நியாயமான ஓர் ஏற்பாடுதான் என்று தான் கருதுவதாக திரு லீ குறிப்பிட்டார்.

