கைரேகை, முகத்தை அடையாளம் காணும் புதிய ‘சிங்பாஸ்’ செயலி

அரசாங்கத்தின் இணையச் சேவை களைப் பெறுவதற்கு கைரேகை, முகம் போன்றவற்றை அடையாளம் காணும் புதிய செயலி அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இணையச் சேவைகளைப் பெற இனி கடவுச் சொல்லை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை. சிங்கப்பூர் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பால் உரு வாக் கப்பட்ட இந்தச் செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. “புதிய ‘சிங்பாஸ்’ அரசாங்க இணையத்தளங்களுக்குள் நுழை வதை எளிதாக்கியுள்ளது. இந்தப் புதிய முறையில் கைரேகை மற்றும் முகத்தைப் பார்த்து நம்மை அரசாங்க இணையத் தளங்கள் அடையாளம் கண்டுகொள்ளும்.

“நாம் எப்போது அரசாங்க இணை யச் சேவைகளைப் பெற விரும்புகிறோமோ அப்போது நமது கடவுச்சொல்லைத் தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை,” என அரசாங்க தொழில்நுட்ப அமைப்பின் அறிக்கை ஒன்றில் அதன் தலைமை அதிகாரி திரு காக் பிங் சூன் கூறியுள்ளார். தற்போதுள்ள கடவுச்சொல் முறையில் பாதுகாப்பு இடர்பாடுகள் உள்ளன. மற்றவரால் எளிதில் யூகிக்கக்கூ டிய வகையில் கடவுச் சொல்லை வைப் பது, கடவுச் சொல்லை நண்பர் களு டன் எளிதில் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பாதுகாப்பற்ற செயல்கள் இந்தப் புதிய செயலி மூலம் தவிர்க்கப்படுகின் றன. அத்துடன் சிலர், யாருமே ஊகிக்க முடியாத வகையில் கடவுச் சொல்லை வைப் பார்கள்.

அந்தக் கடவுச்சொல்லை அவர்க ளா லேயே நினைவில் வைத்துக்கொ ள்வது சிரமமாகி விடும். மீண்டும் புதிய கடவுச்சொல் வேண்டி அவர்கள் விண்ணப்பிக்க நேரிடும். இதுபோன்ற இக்கட்டுகள் இனி இருக்காது. கடவுச்சொல்லை மறந்துவிட்டு புதிய கடவுச் சொல்லுக்கு விண் ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை மாதத்திற்கு 150,000 பேர் என் கிறது அரசாங்கத் தொழில் நுட்ப அமைப்பு. மொத்தம் 3.3 மில்லியன் பேர் சிங்பாஸ் இணையச் சேவை யைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர் கள் புதிய அங்க அடையாளத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள செயலிக்கு மாற குறிப்பிட்ட காலக்கெடு தரப்படும். அதுவரை யிலும் பயனாளர்கள் கடவுச்சொல் முறையைப் பயன் படுத் திக் கொள் ள லாம் என்று தெரிவிக் கப் பட்டுள்ளது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.