வெளிநாட்டுப் பணிப்பெண்கள் தங்கள் ஓய்வு நாட்களைப் பயனுள்ள வகையிலும் மகிழ்ச்சியாகவும் கழிக்கும் வகையில் மாபெரும் மனமகிழ் மன்றம் உருவாகிறது. அது தற் போதுள்ள மனமகிழ் மன்றத்தைக் காட்டிலும் பத்து மடங்கு பெரிதாக இருக்கும். அங்கு வருகை தரும் சக பணிப்பெண்களுடன் பழகு வதுடன் விளையாட்டு, உடற்ப யிற்சி, ஆலோசனை மற்றும் புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளுதல், தாய்நாட்டுக் குப் பணம் அனுப்புதல் போன்ற சேவைகளையும் அவர்கள் பெறலாம்.
சின் செங் அவென்யூ வில் தெலுக் குராவ் உயர்நிலைப்பள்ளி செயல்பட்ட கட்டடத்தில் உருவாகும் அந்த புதிய மனமகிழ் மன்றம் அடுத்த ஆண்டில் தயாராகும். ஃபாஸ்ட்' என்ற ழைக்கப் படும் வெளிநாட்டுப் பணிப் பெண்கள் சங்கத்தின் சமூக ஆதரவு மற்றும் பயிற்சி பிரிவின் கீழ் இந்த மன்றம் செயல்படும். இதனை அப்பிரி வின் தலைவர் சியா செங் சூன் வெளி நாட்டுப் பணிப் பெண்கள் தினமான நேற்று முன்தினம் அறிவித்தார்.

