கார் நிறுத்தத் தடுப்பில் மோதல்; மோட்டார் சைக்கிளோட்டி காயம்

1 mins read
018a6b38-f583-4ac3-9e7a-727b308f6323
-

கார் நிறுத்துமிட நுழைவாயிலில் உள்ள தடுப்பில் கார் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி காயமடைந்தார். இந்தச் சம்பவம் அட்மிரல்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. புளோக் 482ஏ=க்கு அருகே நடந்த இந்தச் சம்பவம் குறித்து மாலை 6 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி 20 வயது மதிக்கத் தக்கவர் என்றும் அவர் கூ டெக் புவாட் மருத்துவமனை க்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. 27 வயதுள்ள கார் ஓட்டுந ர் காயமடையவில்லை. மோட்டார் சைக்கி ளோட்டிக்கு கைகளிலும் கால்களிலும் சிராய்ப்புகள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்டோம்ப்