ஒப்பந்தம் மீறிய மருத்துவர்; தண்டனைக்குப் பின் இன்னொரு வாய்ப்பு

ஒப்பந்தம் மீறிய மருத்துவர்; தண்டனைக்குப் பின் இன்னொரு வாய்ப்பு

1 mins read

குறிப்பிட்ட ஒரு பொது மருத்துவ மனையில் மட்டும் பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தம் நடை முறையில் இருக்க, அதை மீறி மருந்தகம் ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிந்தார் டாக்டர் ஜோவெல் அருண் சூர்சாஸ். கனடாவில் இருக்கும் தமது முன்னாள் காதலியைச் சென்று காண கூடுதல் பணம் தேவைப் பட்டதால் மருந்தகத்தில் வேலை செய்ய அவர் முடிவெடுத்தார். மருந்தகத்தின் மருத்துவர் விடுப்பில் சென்றதை அடுத்து அவருக்குப் பதிலாக அவர் அங்கு வேலை செய்தார்.

2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை மொத்தம் 47 முறை அந்த மருந்தகத்தில் வேலை செய்த தாகவும் அதன் மூலம் $13,000 சம்பாதித்ததாகவும் டாக்டர் சூர்சாஸ் ஒப்புக்கொண்டார். மருந்தகத்தில் வேலை செய்ய அவர் நான்கு முறை மருத்துவ விடுப்பு எடுத்ததாக தெரிவிக் கப்பட்டது. டாக்டர் சூர்சாஸை சிங்கப்பூர் மருத்துவச் சங்கம் மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தது. அதுமட்டுமல்லாது, அவருக்கு $15,000 அபராதமும் விதித்தது. விசாரணைக்கான செலவை ஏற்றுக்கொள்ள டாக்டர் சூர்சாசுக்கு அது உத்தரவிட்டது. ஒப்பந்தத்தை டாக்டர் சூர்சாஸ் மீறியதால் சுகாதார அமைச்சு அவரை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பணிநீக்கம் செய்தது.