'கிராப்' நிறுவனத்துக்கு $6.42 மி. அபராதம்

'கிராப்' நிறுவனத்துக்கு $6.42 மி. அபராதம்

2 mins read
c837e25e-95a3-4017-bd5c-c2dc940db34a
-

'கிராப்' எனப்படும் வாடகை வாகனச் சேவை வழங்கும் நிறுவனம் போட்டித்தன்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி தனக்கு எதிராக சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீ ட்டாளர் ஆணையம் விதித்த $6.42 மில்லியன் அபராதத் தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தத் தொகையை அது செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. கிராப் நிறுவனம் ஊபர் வாடகை வாகன சேவை நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய வர்த்தகத்தை எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து கிராப் $6.42 மில்லிய னும் ஊபர் $6.58 மில்லியன் அபராதமும் கட்ட வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது. இதற்குத் தனக்கு விதிக் கப்பட்ட அபராதத்துக்கு எதிராக ஊபர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

எனினும், ஆணையம் தனது முடிவுக்குக் கூறிய காரணங்களில் சிலவற்றில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்தப் பிரச்சினை தொடர்வதைத் தான் விரும்பவில்லை என்று கூறும் கிராப் நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று கூறி யுள்ளது. "இந்தப் பிரச்சினையில் பல் வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளதுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மேல்முறையீடு செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.

"இதில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் அனைத்தையும் செயல்படுத்துவோம். அத்துடன், அபராதத் தொகையையும் செலுத்துவோம்," என்று கிராப் நிறு வனத்தின் தலைமைப் பொறுப் பிலுள்ள திரு லிம் கெல் ஜே கூறி உள்ளார். "இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தததில் எங்களுக்கு மகிழ்ச்சி. இனி எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சேவை ஆற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்," என்றார் திரு லிம். இதற்கு மாறாக, ஊபர் நிறுவனம் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்