தோட்டக்கலைக்கான நிலப்பகுதிகளுக்குப் பதிவு செய்யலாம்

தோட்டக்கலைக்கான நிலப்பகுதிகளுக்குப் பதிவு செய்யலாம்

1 mins read

அங் மோ கியோ கார்டன் வெஸ்ட் ஜூரோங் லேக் கார்டன் வெஸ்ட் ஆகிய இடங்களில் தோட்டக் கலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகளைப் பெற தோட்டக்கலையில் விருப்பமுள்ளவர்கள் அடுத்த மாதம் 9ஆம் தேதி விண்ணப்பம் செய்யலாம். இந்த நிலப்பகுதிகளுக்கான விண்ணப்பத்தை முதல்முறையாக இணையம் வழி செய்யலாம். இதற்கு முன்பு நிலப்பகுதியைப் பெற விரும்புவோர் அந்தந்த பூங்காக்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டி இருந்தது.

இம்முறை அங் மோ கியோவில் 50 நிலப்பகுதிகளும் ஜூரோங்கில் 300 நிலப்பகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பிடோக் டவுன் பூங்கா, சுவா சூ காங் பூங்கா, பாசிர் ரிஸ் பூங்கா, செங்காங் ரிவர்சைட் பூங்கா, ஈசூன் பூங்கா ஆகியவற்றில் ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகள் மூன்று மணி நேரத்தில் பதிவுசெய்யப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பெருந் திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டுக்குள் 11 பூங்காக்களில் 1,000க்கும் மேற்பட்ட தோட்டக்கலை நிலப்பகுதிகள் ஒதுக்கப்படும். தற்போது ஒன்பது பூங்காக் களில் உள்ள 620 நிலப்பகுதிகள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக கழகம் தெரிவித்தது.

நிலப்பகுதிகளைப் பதிவு செய்ய விரும்புவோர் அடுத்த மாதம் 9ஆம் தேதி காலை 9 மணி யிலிருந்து 12ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பம் செய்ய லாம்.

கூடுதல் விவரங்களுக்கு www.nparks.gov.sg/gardening/ allotment=gardens எனும் இணையப்பக்கத்துக்குச் செல்லவும்.