சட்டவிரோத உடல் எடை குறைப்பு மருந்துகள் பறிமுதல்

சட்டவிரோத உடல் எடை குறைப்பு மருந்துகள் பறிமுதல்

1 mins read
Google News Preferred Icon

$9,000 பெறுமானமுள்ள சட்டவிரோத எடை குறைப்பு மருந்துகளைச் சுகாதார அறிவியல் ஆணையத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இன்டர்போல் எனும் அனைத்துலக போலிஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4,500க்கும் அதிகமான சட்டவிரோத எடை குறைப்பு மருந்துப் பொட்டலங்கள் சிக்கின. பறிமுதல் செய்யப்பட்ட எடை குறைப்பு மருந்துகளைச் சோதனையிட்டபோது அவை தடை செய்யப்பட்ட சிபுட்ராமின் கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சிபுட்ரமின் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பதிவு செய்யப்படாத மருந்துகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.