ஆயுதம் ஏந்தி கொள்ளை: 60 வயது ஆடவர் கைது

ஆயுதம் ஏந்தி கொள்ளை: 60 வயது ஆடவர் கைது

1 mins read
Google News Preferred Icon

கிளார்க் கீ வட்டாரத்தில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் 89 வயது நாணய மாற்று வணிகரிடம் கத்தியைக் காட்டி கொள்ளையடிக்க முயன்ற ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்தக் கொள்ளை முயற்சி கடந்த சனிக்கிழமை இரவு 8.20 மணி அளவில் தி சென்ட்ரல் மாலில் நிகழ்ந்தது. ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்க முயன்ற குற்றத்துக்காக 60 வயது ஆடவர் ஒருவரை மத்திய போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் பிடோக் சவுத் அவென்யூ 2இல் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு சந்தேகப்பேர்வழியை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

நாணய மாற்று வணிகர் கடையிலிலிருந்து தனியாக வெளியே வர சந்தேக நபர் காத்துக்கொண்டிருந்ததாகவும் அவர் வெளியே வந்ததும் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் ‌ஷின்மின் நாளிதழ் குறிப்பிட்டது. அதிர்ச்சி அடைந்த நாணய மாற்று வணிகர் உதவி கேட்டு கத்தியதாகக் கூறப்படுகிறது. பணத்தைக் கொள்ளையடிக்காமலேயே சந்தேக நபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.