கூடுதல் புதிய வீடுகள் விற்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே விற்கப்பட்ட வீடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்குக் கடந்த நிதி ஆண்டில் ஏற்பட்ட பற்றாக்குறைக்கு இவையும் ஒரு காரணம். வீவக அதன் வருடாந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. 2017/2018 நிதி ஆண்டில் அதற்கு மொத்தம் $1.717 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பற்றாக்குறை அளவு $1.189 பில்லியனாக இருந்தது. வீவகவின் வீட்டுரிமைத் திட்டத்தில் பற்றாக்குறை அளவு $861 மில்லியனிலிருந்து 1.383 பில்லியனுக்கு உயர்ந்தது. வீட்டு விற்பனை, மத்திய சேமநிதியின் வீடமைப்பு மானியங்கள் போன்றவையால் பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
கூடுதல் வீடுகள் விற்பனை, மேம்பாடு: வீவகவின் பற்றாக்குறை உயர்ந்தது
1 mins read

