இன்னும் சில நாட்களில் ஜிசிஇ மேல்நிலைத் தேர்வை எழுத இருக்கும் ஏறத்தாழ 200 மாணவர்கள் கடந்த வாரயிறுதியில் நோய்வாய்ப்பட்டனர். ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தைச் சேர்ந்த இந்த மாணவர்களின் இந்த நிலைக்குச் சுகாதாரமற்ற உணவு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆறாம் ஆண்டு மாணவர்கள். அவர்களில் பல ருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட்டதாக அறியப்படுகிறது. மாணவர் ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் காலை நிலவரப்படி பெரும்பாலான மாண வர்கள் குணமடைந்துவிட்டதாக ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் முதல்வர் ஃபிரேடரிக் இயோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட மாணவர் வீடு திரும்பி விட்டார். மேல்நிலைத் தேர்வுக்குத் தயாராக மாணவர்கள் அதற்கான விடுப்பில் இருப்பதாகவும் நோய் வாய்ப்பட்ட மாணவர்கள் தங்கள் வீட்டில் ஓய்வு எடுக்கலாம் என்றும் என்று திரு இயோ கூறினார். நிலைமையை ராஃபிள்ஸ் கல்வி நிலையம் மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் மாணவர்களின் நிலைக்கான காரணத்தைக் கண்டறிய தகுந்த அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் கிட்டத்தட்ட 1,200 ஆறாம் ஆண்டு மாணவர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் நாளை நடைபெற இருக்கும் ரசாயனப் பாட மேல்நிலைத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் ஆறாம் ஆண்டு மாணவர் களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

