ஸிக்காவுக்கு என்டியு புதிய மருந்து கண்டுபிடித்துள்ளது

ஸிக்காவுக்கு என்டியு புதிய மருந்து கண்டுபிடித்துள்ளது

1 mins read

கொசுக்களால் பரப்பப்படும் ஸிக்கா வைரஸ் கிருமிகள் மோச மான பாதிப்புகளை ஏற்படுத்து வதற்கு முன்னதாகவே அவற்றை அழித்துவிடக்கூடிய மருந்தை நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். பெரும்பாலும் மூளை, மத்திய நரம்பு மண்டலத்தைக் குறிவைக் கக்கூடியது ஸிக்கா வைரஸ். சுமார் ஆறு ஆண்டுகால ஆய் வுக்குப் பிறகு உருவாக்கப்பட் டுள்ள இந்த மருந்து மூளையில் ஏற்படக்கூடிய வைரஸ் தொற்றை யும் கையாளக்கூடியதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள மருந்து ஸிக்கா வைரசின் உடல்கூறைத் தாக்கக்கூடிய தனித்துவம் வாய்ந்தது என்று நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் நம்-ஜூன் சோ தெரிவித்தார். இந்த புதிய மருந்து ஸிக்கா வைரசின் சவ்வைக் குறிவைப்பதன் மூலம் வைரசை தகர்க்க முடிகிறது என்றார் பேராசிரியர் சோ. பிரேசிலின் மினாஸ் கெரைஸ் ஃபெடரல் பல்கலைக்கழகம், பெல்ஜியத்தின் கென்ட் பல் கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தது.

இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர் மெட்டீரியல்ஸ்' எனும் அனைத் துலக சஞ்சிகையில் கடந்த திங்கட்கிழமை வெளியாகின. கடந்த 2016ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மொத்தம் 400 பேர் ஸிக்கா வைரசால் பாதிக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை ஒருவர் மட்டுமே ஸிக்காவால் பாதிக்கப் பட்டுள்ளார்.