22 வயது ஆடவரிடம் $50,000 இணைய மோசடி

22 வயது ஆடவரிடம் $50,000 இணைய மோசடி

1 mins read

ஆட்கடத்தல் மோசடி ஒன்றின் தொடர்பில் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று அவரது சம்மதமின்றி $49,500 வேறு கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றில் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதாக தொலைபேசி வழியாக அழைப்பு ஒன்றைப் பெற்ற அந்த 22 வயது ஆடவர், இரண்டு மோசடி இணை யப்பக்கங்களைத் திறக்குமாறு கோரப்பட்டதாக போலிசார் நேற்றுத் தெரிவித்தனர்.

அந்த மோசடி இணையப்பக்கங் களில் தம்முடைய வங்கிக் கணக்கு விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு பணிக்கப்பட்ட அந்த ஆடவர், அவரது கணினியை தூரத்தில் இருந்து பயன்படுத்து வதற்கு அனுமதிக்கும் மென் பொருளை பதிவிறக்கம் செய்யு மாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அதனை அடுத்து தனது வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகை மோசடியாக வேறு கணக்குக்கு மாற்றப்பட்டதை அறிந்த அந்த ஆடவர் இம்மாதம் 17ஆம் தேதி போலிசில் புகார் செய்தார்.

அந்நியர்களிடமிருந்து விரும் பத்தகாத தொலைபேசி அழைப்பு களைப் பெறும்போது கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு போலி சார் அறிவுறுத்தியுள்ளனர். மோசடி தொடர்பான ஆலோ சனைகளுக்கு மோசடி எதிர்ப்பு நேரடி தொலைபேசி எண்ணான 1800-722-6688ஐ அழைக்கலாம். அல்லது என்ற www.scamalert.sg இணையப்பக்கத்தை நாடலாம்.