தேசியக் கொடி சிதைக்கப்பட்ட படம் தொடர்பில் கடும் எச்சரிக்கை

தேசியக் கொடி சிதைக்கப்பட்ட படம் தொடர்பில் கடும் எச்சரிக்கை

1 mins read

சிங்கப்பூர் தேசியக் கொடி கிழிந் திருந்தது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய டிபிஎஸ் வங்கியின் முன்னாள் ஊழியருக்கு போலிசார் கடுமை யான எச்சரிக்கை விடுத்துள்ளனர். விசாரணை, தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்துட னான ஆலோசனை ஆகியவற் றைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த போலிஸ் தரப்பு தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஃபேஸ்புக்கில் திரு அவிஜிட் தாஸ் பட்நாயக் பதிவேற்றிய படத் தில் ஒரு கறுப்பு வண்ண டி-சட்டையும் சிங்கப்பூர் கொடி கிழிந்து அதனடியில் இருக்கும் இந்தியக் கொடி தெரியும்படி வரைகலை ஓவியம் காணப்பட்டது. இதன் தொடர்பில், போலிசார் இம்மாதம் மூன்றாம் தேதி கடுமை யான எச்சரிக்கையை அவருக்கு விடுத்தனர். சிங்கப்பூர் ஆயுதங்கள், கொடி, தேசிய கீத விதிமுறைகளின் கீழ் 44 வயது பட்நாயக் விசாரிக்கப் பட்டார். அதன்படி யாரும் தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.