சாங்கி விமான நிலையத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் காணப்பட்ட பயணிகள் எண்ணிக்கை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.1 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சாங்கி விமான நிலையத்தின் குழுமம் நேற்று அறிக்கை வெளியிட்டது. குறிப்பாக வடகிழக்காசிய வட்டார நாடுகளிலிருந்து வந்தோர், சென்றோர் எண்ணிக்கை சென்ற மாதம் 7 விழுக்காடு உயர்ந்ததாகவும் கூறப்பட்டது.
சீனா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த பயணிகளே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இதன் தொடர்பில் இம்மாதம் 11ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்குச் செல்லும் உலகின் மிக நீண்ட விமானப் பயணத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்துள்ளதால் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

