ஆசியாவின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 'கியுஎஸ்' நிறுவனம் தேர்வு செய்த 2019ஆம் ஆண்டுக்கான இப்பட்டியலில் முதலிடம் பெற்ற சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் இவ்வாண்டு இரண்டாவது இடத்தில் இருந்தது. முதலிடத்தைப் பிடித்திருந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 2019ஆம் ஆண்டு பட்டியலில் மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது. சீனா, ஹாங்காங் நாடுகளின் ஆறு பல்கலைக்கழகங்கள் பட்டியலின் முதல் பத்து நிலைகளை ஆக்கிரமிக்கின்றன. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் 78ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆசியாவிலேயே முதலிடத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்
1 mins read
-

