கிழக்கு-மேற்கு எம்ஆர்டி பாதையில் உள்ள ஆறு நிலையங்கள் அடுத்த மாதம் ஒரு சில நாட்களன்று பராமரிப்புப் பணிக்காக இரவு 11 மணியுடன் மூடப்படும். நவம்பர் 2, 3, 9, 10, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் பைனியரில் தொடங்கி துவாஸ் லிங்க் வரையிலான எம்ஆர்டி நிலையங்கள் இதனால் பாதிக்கப்படும் என்று நேற்று எஸ்எம்ஆர்டி கூட்டுநிறுவனம் தெரிவித்தது.
நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இந்நேரத்தைப் பயன்படுத்தி மின்சார விநியோக அமைப்பைப் புதுப்பிப்பதுடன் வேறு பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்வர். இம்மாற்றத்தால் பாதிக்கப்படும் பயணிகளுக்கென எம்ஆர்டி நிலையங்களின் அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துச் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

