கரிம வெளியீட்டின் அளவைக் குறைத்து, வெப்பநிலை உயர் வதைத் தடுக்கும் முயற்சியில் பங்களிக்க 300க்கும் மேற்பட் டோர் நேற்று உறுதி எடுத்துக் கொண்டனர். இவர்களுடன் இந்த உறுதியை எடுத்துக்கொண்ட வர்கள் எண்ணிக்கை 303,300 ஆகி உள்ளது. மறுபயனீடு செய்வது, எரிசக்தி சேமிப்புக் கருவிகளைப் பயன் படுத்துவது, தண்ணீரைச் சிக் கன மாகப் பயன்படுத்துவது என பல்வேறு வழிகளில் கரிம வெளி யீட்டைக் குறைக்க இவர்கள் கடப்பாடு கொண்டுள்ளனர். உறுதிமொழியை எடுத்துக் கொண் டோரில் சுகாதார; சுற்றுப்பு ற நீர்வள மூத்த துணை அமைச் சர் டாக்டர் ஏமி கோரும் ஒருவர். சன்டெக் சிட்டி மாநாட்டு மண் டபத்தில் நேற்று நடைபெற்ற 'ஆர்ஹெஜ்டி' ஆசியான் உச்ச நிலைக் கூட்டத்தில் டாக்டர் கோர் சிறப்புரை ஆற்றினார்.
இயற்கைப் பேரிடர்கள், பருவ நிலை மாற்றங்கள் ஆகியவற்றால் பெரிதும் பாதிப்படையக்கூடிய வட் டாரமாகத் தென்கிழக்காசியா இருந்து வருகிறது. அதனால் சுற்றுச்சூழல் மீள்திறன் சக்தியை வலுப்படுத்த வேண்டும் என்று டாக்டர் கோர் வலியுறுத்தினார். ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள உலக நாடுகளின் இன்றைய சூழலில் பருவநிலை தொடர்பான பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை நாடு களின் எல்லைகளைத் தாண்டி, மற்ற நாடுகளின் பொருளியலையும் சமுதாயங்களையும் பாதிக்கக் கூடியவை என்றார் அமைச்சர். "அதிகரித்து வரும் சுற்றுப்புற அபாயங்களுக்கு எதிராக ஆசியான் தொடர்ந்து ஒற்றுமை யாகவும் மீள்திறனுடனும் இருப்ப தை உறுதிசெய்ய மற்ற ஆசியான் நாடுகளுடன் இணைந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்," என்றார் அமைச்சர் ஏமி கோர்.

