சி யுவான் உணவங்காடியின் கடைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டணம் செலுத்தும் தானியங்கி இயந்திரங்கள் செயல்படவில்லை. சிங்கப்பூரில் முதன்முதலாக இந்த தானியங்கி முறை ஹவ்காங்கில் உள்ள இந்த உணவங்காடியில் மூன்றாண்டுகளுக்கு முன் அறி முக மா னது. ஆனால், 2015, ஆகஸ்ட் மாதம் இயங்கத் தொடங்கிய இவ்வியந் திரங்கள் ஓராண்டி லேயே பழுது அடையத் தொடங்கின. எனவே, தற்போது வாடிக்கை யாளர் கள் கடைக்காரர்களிடமே பணம் செலுத்துகின்றனர். சில இயந்திரங்கள் கிட்டத்தட்ட ஈராண்டுகளாக பழுது நிலையில் உள்ளதாக சில கடைக்காரர்கள் 'த நியூ பேப்பர்' நாளிதழிடம் கூறினர்.
இயங்கும் இயந்திரங்கள் கூட அடிக்கடி பழுதடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த இயந்திரங்களுக்கு மாற் றுப் பகுதிகள் இல்லாத காரணத் தால் பழுதுபார்க்க முடியவில்லை என்று நிர்வாகம் தங்களுக்குத் தெரிவித்ததாகவும் உணவுக் கடைக்காரர்கள் கூறினர். கடைக்காரர்கள் உணவைச் சுகாதாரமான முறையில் கையாள இதுபோன்ற இயந்திரங்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் பழுதான நிலையிலேயே நீடித்து இருக்கும் இந்த இயந்திரங்களால் பயனில்லாமல் போகிறது.

