சிங்கப்பூரின் வான்சாகச வீரர் இந்தியாவில் மரணம்

சிங்கப்பூரின் வான்சாகச வீரர் இந்தியாவில் மரணம்

1 mins read
62af0387-09f5-44fd-9887-4a9e54df57f3
-

சிங்கப்பூரின் வான்சாகச வீரர் திரு எங் கோக் சூங் உடல் வட இந்தியாவின் இமாசலப் பிரதேசத் தில் உள்ள பிர் பில்லிங் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தியாவில் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள அனைத் துலக வான்சாகசப் போட்டியில் பங்கேற்பதற்காக 53 வயது திரு எங் அங்குச் சென்றிருந்தார். திங்கட்கிழமை வான்சாகசப் பயற்சிக்காக தம் சாதனங்களுடன் காலை 11 மணிக்குப் புறப்பட்ட திரு எங் பயிற்சிக்குப் பின் விடுதிக்குத் திரும்பவில்லை. அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வானிலை மோச மாக இருந் ததாகவும் கூறப்பட்டது.

காணாமல்போ ன திரு எங்கைத் தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் ஹெலிகாப்டரில் சென்று அவரு டைய உடலை மீட்டெடுத்த தாக சிங்கப்பூர் வான் விளையாட்டுக் கூட்டமைப்பு தெரிவித்தது. அவரது உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவருடைய மனைவி ஷேரனும் மூத்த மகன் மார்கஸும் நேற்று இந்தியாவுக்குச் சென்றிருந்தனர்.

அனைத்துலக வான்குடை சாகசப் போட்டிக்காக பிர் பில்லிங் சென்றிருந்த திரு எங் கொக் சூங் ஒரு பயற்சிக்குப் பின் உள்ளூர் மக்களுடன் படம் எடுத்துக் கொண்டார். வானிலை மோச மாக இருப்பதாக சக விளையாட்டாளர் களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்று கூறப்பட்டது. படம்: ஷேரன் எங்