போக்குவரத்தைத் திட்டமிட பொதுமக்கள் உதவிக்கரம்

1 mins read

பொதுமக்களுக்காக அர்த்தமுள்ள இடங்களாகச் சாலைகள் மாற, அவற்றில் வாகனங்கள் ஓடுவதைக் குறைக்கும் நோக்கில் சிங்கப்பூரின் 'கார்-=லைட்' திட்டம் உருவானது. அத்திட்டம் வெறும் கனவாக மட் டும் இல்லாமல் அதை நனவாக் குவதற்காக பொதுமக்களில் 40 பேர் நேற்று போக்குவரத்தைத் திட்டமிடும் குழுவாக சிந்தனைக் களத்தில் இறங்கினர். நிலப் போக் குவரத்து ஆணையத்தின் 2040 பெருந்திட்டம் தொடர்பில் ஆணையம் மூன்றில் முதலாவது கலந்துரையாடலை நடத்தியது. நான்கு மணி நேரம் நடத்தப் பட்ட அக்கலந்துரையாடலில் பங் கேற்றோர், பலகை விளையாட்டு விளையாடியதன் வழி போக்குவரத்து பாதைகளையும் தெரிவுகளையும் திட்டமிடுவது பற்றி அறிந்துகொண்டனர்.

ஒரு குறிப்பிட்ட தொகையில் நிலப் போக்குவரத்து அமைப்பு முறையைத் திட்டமிடுவதைப் பற்றி யும் பயணிகளின் வெவ்வேறு விருப்பங்களைப் புரிந்துகொள் வதுமே ஆணையம் வடிவமைத்த இவ்விளையாட்டின் நோக்கம். நிலப் போக்குவரத்து ஆணையத்தின் 2040 பெருந் திட்டம் சென்ற மாதம் அறிவிக்கப் பட்டதன் தொடர்பில் மூன்று பெரும் கருப்பொருள்கள் அதில் உள்ளடங்கியுள்ளன. அதில் முதல் கருப்பொருளானது நடப்பது, மிதிவண்டி மற்றும் வாகனம் ஓட்டுவது ஆகியவற்றை எவ்வாறு பயணங்களுக்குப் பயன் படுத்துவதே ஆகும். இதன் அடிப் படையில் நேற்றைய முதல் கலந் துரையாடல் அமைந்தது. அடுத்த மாதம் மேலும் இரு கலந்துரையாடல்கள் நடக்க உள் ளன. நடப்பது, மிதிவண்டி மற்றும் வாகனம் ஓட்டுவதை மேலும் எவ் வாறு எளிமைப்படுத்துவது, மேலும் அதிக மக்களை எவ்வாறு உள் ளடக்குவது என்ற அடிப்படையில் இரண்டாவது கலந்துரையாடல் அமையும்.