பீஷான், மெரினா நீர்நாய் குடும்பங்களிடையே தகராறு

பீஷான், மெரினா நீர்நாய் குடும்பங்களிடையே தகராறு

1 mins read
164660c2-d93d-4384-b767-df0b9edb91b7
-
Google News Preferred Icon

நீர்நாய் ஆர்வலர்களிடையே பிர பலமாக இருந்து வரும் இரண்டு நீர்நாய் குடும்பங்களுக்கிடையே காலாங் பேசின் பகுதியில் அண் மையில் மீண்டும் சண்டை நிகழ்ந் துள்ளது. பீஷான் நீர்நாய் குடும்பம், மரினா நீர்நாய் குடும்பம் ஆகிய வற்றுக்கிடையே கடந்த புதன் கிழமை சுமார் ஒரு மணி நேரத் துக்கு சச்சரவு நிகழ்ந்ததாக நீர் நாய் கவனிப்பாளர்கள் தெரி வித்துள்ளனர். இரண்டு குடும்பங்களும் அடி தடியில் இறங்கத் தயாரானதும் பீஷான் குடும்ப நீர்நாய்கள் மரினா குடும்ப நீர்நாய்களுக்கு இடையே புகுந்து அவற்றை இரு பிரிவுகளாக்கி சண்டையைத் தொடர்ந்தன. மரினா நீர்நாய் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் நீர்நாய் களுடன் பீஷான் நீர்நாய்கள் நிலத்தின் மீது சண்டையிடுவதும் காணொளியில் காணப்பட்டது. இந்தச் சண்டையில் இரு தரப் பிலும் எந்த நீர்நாய்க்கும் காயம் ஏற்படவில்லை.