ஆசியான்-சீனாவின் கடற்படைப் பயிற்சியால் மேம்பட்ட உறவுகள்

ஆசியான்-சீனாவின் கடற்படைப் பயிற்சியால் மேம்பட்ட உறவுகள்

1 mins read
Google News Preferred Icon

ஆசியான்-சீனாவின் முதல் கடற்படைப் பயிற்சி நேற்று முடிவடைந்ததில் ஆசியான், சீன கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பில் முன்னேற்றம் தெரிவதாக அதில் பங்கேற்றோர் தெரிவித்தனர். ஆறு நாட்கள் இடம்பெற்ற இப்பயிற்சியில் இணைந்து தேடி மீட்கும் பணிகள் போன்ற கடற்படை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் சான்ஜியாங் கடல்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்தது ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுவதாக சிங்கப்பூர் கடல் படைத் தலைவர் லிம் யு சுவான் தெரிவித்தார்.

பயிற்சியில் பங்கேற்றோர் அதில் கிடைத்த பலன்கள் குறித்துத் தங்கள் திருப்தியைத் தெரிவித்ததாகவும் இதனால் கடற்படைகளுக்கு இணைந்து செயல்படுவதில் கூடுதல் நம்பிக்கை வந்ததாகவும் கர்னல் லிம் சொன்னார். எதிர்காலத்தில் கடற்பகுதிகளில் நிகழக்கூடிய கடற்படைச் சம்பவங்களின்போது எவ்வாறு இயங்குவது என்பதையும் பங்கேற்ற கடற்படையினர் அறிந்துகொண்டனர்.