வேலை சந்தைக்கு இல்லத்தரசிகளை ஈர்க்க ஊக்குவிப்புத் திட்டங்கள்

வேலை சந்தைக்கு இல்லத்தரசிகளை ஈர்க்க ஊக்குவிப்புத் திட்டங்கள்

1 mins read

பிள்ளை வளர்ப்பில் பங்காற்றுவதற்குச் சில காலம் வீட்டிலேயே இருந்து வரும் இல்லத்தரசிகளை மறுபடியும் வேலை சந்தைக்கு ஈர்க்கும் முயற்சியில் சில நிறுவனங்கள் இறங்கியுள்ளன. வேலை அனுபவத்தில் ஓர் இடைவெளி இருப்பதை அறிந்திருந்தும் சில அனைத்துலக நிறுவனங் களும் சிறிய நடுத்தர நிறுவனங்களும் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளன. வேலைக்குத் திரும்புவதற்கான வேலைப்பயிற்சிகள், வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி பயிற்சிகள், நீக்குப்போக்கான வேலை நேரங்கள் எனப் பல்வேறு திட்டங்களை இந்நிறுவனங்கள் வழங்கத் தயாராக உள்ளன. தாய்மார்களை மட்டுமல்லாமல் வேலை செய்யாமல் தங்கள் வாழ்க்கையில் ஓர் இடைவெளி ஏற்பட்டோரையும் முதலாளிகள் நியமிக்க விரும்புகின்றனர். அவர்களின் பலதரப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் தங்கள் வேலையிடத்துக் குழுக்களுக்கு மெருகூட்டும் என்று இவர்கள் நம்புகின்றனர்.