லோர்னி நெடுஞ்சாலை முதல் பகுதி திறப்பு

லோர்னி நெடுஞ்சாலை முதல் பகுதி திறப்பு

1 mins read
17166a1e-06d8-45b1-93b0-8b205541b321
-

லோர்னி நெடுஞ்சாலையின் முதல் பகுதி நேற்று அதிகாரபூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்துவிடப் பட்டது. அந்த நெடுஞ்சாலைப் பகுதிக்குப் புக்கிட் பிரௌன் ரோடு என்று முன்பு பெயர். அந்தச் சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பகுதி தாம்சனி லிருந்து தீவு விரைவுச்சாலை மற்றும் ஆடம் ரோடு, ஃபேரர் ரோடு ஆகியவற்றை நோக்கிச் செல்லும் போக்குவரத்திற்கு இடம் அளிக்கிறது. அந்தப் பகுதி லோர்னி ரோட் டிற்கு இணையாகச் செல்கிறது.

நெடுஞ்சாலைக்குச் செல்லும் நுழைவு இடத்திற்கு அருகே அமைக்கப்பட்டு இருக்கும் சுரங்கம் வழியாக வாகனங்கள் லோர்னி ரோட்டில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லலாம். தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு இப்போது உதவு கின்ற லோர்னி ரோட்டிலிருந்து லோர்னி நெடுஞ்சாலைக்குச் செல் லக்கூடிய தற்காலிக இணைப்பு வழி அமைக்கப்பட்டு இருக்கிறது.

தெற்கு நோக்கிச் செல்லும் லோர்னி நெடுஞ்சாலையில் வாகனங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்