ஃபோர்ட் கேனிங் பூங்கா வரலாற்று வளத்தைக் கட்டிக் காப்பதற்காக அறிவிக்கப்பட் டுள்ள மேம்பாட்டு திட்டங்களை யொட்டி தேசிய பூங்கா வாரியம், தொல்பொருள் ஆய்வுக் கண்காட்சிக்கு கடந்த 17 ஆண்டுகளில் முதல் தடவையாக புதுப்பொலிவு அளிக்கிறது. கண்காட்சி இடத்தில் ஆர்ட்டிசன்ஸ் கார்டன் என்ற புதிய புறவெளித் தோட்டம் உள் ளிட்ட வசதிகளும் அமைக்கப் படும். இதற்காக அந்த இடம் வரும் நவம்பரில் மூடப்பட்டு 2-019 ஜூனில் திறக்கப்படும் என்று வாரியம் அறிவித்தது. தொல்பொருள் ஆய்வாளர்களும் பொது மக்களும் இந்த முயற்சி யில் கை கொடுத்து உதவலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தொல்பொருள் ஆய்வு கண்காட்சிக்குப் புதுப்பொலிவு
1 mins read
-

